ஜித்தா அதிரை அய்டா முன்னாள் இந்நாள் நிர்வாகிகளுக்கு பிரிவுபச்சார விழா!

சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள அய்டா அமைப்பின் தலைவர் ரஃபியா மற்றும் முன்னாள் நிர்வாகி உ.க.ஜஃபருல்லாஹ் ஆகியோருக்கு பணி மூப்பு காரணமாக இந்தியா திரும்புவதை அடுத்து அவர்களுக்கு அய்டா சார்பில் பிரிவுபச்சார விழா நடைபெற்றது.

சவூதி அரேபிய ஜித்தாவில் 27 ஆண்டுகள் பணிபுரிந்து பணி மூப்பு காரணமாக ஓய்வு பெறுவதை அடுத்து இந்தியா திரும்பவுள்ளார். மேலும் உ.க. ஜஃபருல்லாஹ் அவர்களும் 35 ஆண்டுகாலமாக சவூதியில் பணிபுரிந்து ஓய்வு பெறுகிறார். இவர்களுக்கு அய்டா அமைப்பு சார்பில் பிரிவுபச்சார விழா ஜித்தா லக்கி தர்பார் உணவக ஆடிட்டோரியத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவில் அய்டாவின் செயலாளர் சம்சுதீன் , பொருளாளர் அப்துல் அஜீஸ், இணை பொருளாளர் அபூபக்கர் மற்றும் இணை செயலாளர் மீராசா ரஃபியா, ஜெய்லானி, இன்னும் பல உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அய்டாவின் ஆலோசகர் ஜஃபருல்லாஹ் வாழ்த்துக் கவிதை படித்தார்.

இறுதியில் ரஃபியா அஹமது அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள் இரவு உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது. 

விழாவில் அய்டா உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது