டிராபிக் ராமசாமி ’மீண்டும்’ தற்கொலை முயற்சி..!!தமிழக ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கித் தரக்கோரி பாரிமுனையில் உள்ள தனது அலுவலகத்தின் மாடியில் ஏறி டிராபிக் ராமசாமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசை கலைக்க தமிழக ஆளுநர் உத்தரவிட வேண்டுமெனவும், இது குறித்து தமிழக ஆளுநரை நேரில் சந்திக்க இன்று மாலைக்குள் அனுமதி வழங்க வேண்டுமென கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமிசாமி, பாரிமுனை பிரகாசம் சாலையிலுள்ள தனது அலுவலகத்தின் 4வது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து அங்கு விரைந்த சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் டிராபிக் ராமசாமியை பத்திரமாக கீழே இறக்கினர். மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என டிராபிக் ரமசாமியை போலீசார் எச்சரித்து சென்றனர். ஏற்கனவே டிராபிக் ராமசாமி இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது