துரிதமாக நடைபெற்றுவரும் அதிரை ரயில்வே பாதை பணி...!!!

நமது அதிரை பெருநகர மக்களால் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்...ரயில்வே பாதை அமைக்கும் பணி மிகவும் துரித வேகத்தில் நடந்து கொண்டிருப்பது மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அதற்கு சாட்சியாக விளங்குவது தான் மேலே உள்ள படங்கள்..இன்று மாலையில் எடுக்கப்பட்டவை. மேலும் இப்பணி நிறைவடைய ஒரு சில மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டின் பாதியில் முக்கிய பணிகள் முடிக்கப்படலாம் என்றும்..2018 இறுதியில் ரயில்வே போக்குவரத்து நடை பெற வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் ரயில்வே பணி சீரும் சிறப்புமாக நடந்தேற நமதூர் அரசியல் கட்சி பொறுப்பில் உள்ளவர்கள், அரசு விவகாரங்கள் தொடர்பில் உள்ளவர்கள் சிறப்பு கவனம் செலுத்துவார்கள்  என்று பொது மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்தல் . அதிரை வா. இபுறாஹிம்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது