அதிரையில் இன்று உலக தாய்ப்பால் வாரம் கொண்டாட்டம்..!
அதிரை அரசு பொது மருத்துவமனையில் இன்று உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டது.உலகம் முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதேபோல் , அதிரை அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்க ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ. அன்பழகன் தலைமை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணியன் ஜெயசேகர் கலந்துகொண்டு தாய்மார்கள் பாலுட்டும் தனி அறையை திறந்துவைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கெளசல்யா, ஏ.சீனிவாசன், எஸ்.கார்த்திகேயன், ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் தாய்ப்பால் முக்கியத்துவம்' குறித்து கேள்வி - பதில் போட்டி நடைபெற்றது. இதில் 15 பேர் கலந்துகொண்டனர். போட்டி முடிவில் வெற்றிபெற்ற 3 பேருக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதேபோல் இன்று அதிரை அரசு பொது மருத்துவமனையில் தாய்ப்பால் கொடுக்க தனி அறை திறக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது