மதுக்கூர் பேரூர் மன்ற செயல் அலுவலரை காணவில்லை என அலுவலக வாயிலில் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு..!மதுக்கூர் இந்திராநகர் பகுதியில் அதிகளவில் சாக்கடை பெருகெடுத்து ஓடி அருகே உள்ள வள்ளுவன் குட்டையில் கலந்துள்ளது.

இது சம்மந்தமான புகார் மனு கொடுக்க பேரூராட்சியில் துணை இயக்குனரை(AD) அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்ட போது செயலர் அலுவலரிடம் மனு கொடுக்கம் படி அவர் கூறியுள்ளார்.
 இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள்
செயல் அலுவலரை தொடர்புகொண்டுள்ளனர்.

ஆனால் அவரோ சுகாதாரம் மேற்பார்வையாளரிடம் மனு கொடுக்க சொல்லியுள்ளார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் பேரூராட்சிக்கு சென்றுள்ளனர். ஆனால் பேரூராட்சி மன்றத்தில்
அவரும் இல்லை என அப்பகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது.


இதனால் மிக எரிச்சல் அடைந்த அப்பகுதி மக்கள்
 ஊழியர்களை காணவில்லை என்று பதாகை எழுதி பேரூராட்சி மன்றத்தில் ஒட்டி வைத்தனர்.

அந்த பதாகையில் மதுக்கூர் பேரூராட்சியின் EOவை காணவில்லை என்றும் , கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் எழுதப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அந்த பதாகைகள்
இப்படிக்கு
இந்திராநகர் பகுதி மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது