அதிரையில் பலத்த மழை!. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி!!

அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இன்று இரவு பலத்த சூரை காற்றுடன் மழை பெய்தது சுமார் ஒரு மணி நேரத்திற்க்கும் அதிகமாக கொட்டி தீர்த்த மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.

இதில் முத்தமால் தெரு, மூன்றாவது வார்டு பகுதி உள்ளிட்டவைகளாகும் மழை நீர் புகுந்துள்ள பகுதிகளில் தன்னார்வ இளைஞர்கள் உதவி செய்து வருகின்றனர் என்றும் மின் தடை காரனமாக பலர் பாதிக்கபட்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது