அதிரை கார் நிறுத்தத்தில் நிருத்தப்படிருந்த இரண்டு கார்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு .

அதிராம்பட்டினம் புதுமனை தெருவை சேர்ந்தவர் SJஅஸ்லம் இவர் காதிர்முகைதீன் கல்லூரியின் முன்னாள் நிர்வாகியாவார்.

இவருக்கு சொந்தமான இரண்டு கார்களை வீட்டில் உள்ள நிறுத்ததில் நிருத்தி இருந்தார். இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த பணியாட்கள் எரிந்த நிலையில் இருந்த இரண்டு கார்களையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து வாகன உரிமையாளர் அஸ்லம் உள்ளிட்டவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க  உள்ளனர்.

அதிரையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே காவல் துறை விழிப்புடன் இருந்து இது போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது