காய்கறி சூப் செய்வது எப்படி!

தேவையானவை: பீன்ஸ் - 10, கேரட் - ஒன்று, கோஸ் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று, பூண்டு - ஒரு பல், வெண்ணெய், மைதா மாவு (அ) சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பால் - ஒரு சிறிய கப், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, காய்கறிகள் வெந்தவுடன் சோள மாவு (அ) மைதா மாவை பாலில் கரைத்து சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து, இறக்கி பரிமாறவும்.விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது