நீட் என்கிற கோடாரி மூலம் பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த “நரபலி” மாணவி அனிதா !பத்திரிகை செய்தி

நீட் என்கிற கோடாரி மூலம் பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த “நரபலி”
மாணவி அனிதா !

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது...

12ஆம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்கள் , மருத்துவ கட்ஆஃபில் இது 196.75. , தனது வாழ்க்கைக் கனவு மற்றும் குடும்பத்தின் கனவு நிறைவேறியாச்சு ...

எம்.பி.பி.எஸ் சீட் உறுதி என்ற மகிழ்ச்சியிலிருந்த மாணவியை பேரிடியாய்த் தாக்கியது “நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!” என்ற அந்த துரோகச் செய்தி.

”நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்" என உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார் அனிதா.

ஆனால் தீர்ப்பு எதிராகவே ஆனது.

இந்நிலையில் அனிதா “தற்கொலை செய்துகொண்டார்” என்ற செய்தி வந்து எம்மை தாக்குகிறது...

மாணவி அனிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை பிரதமர் மோடி , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் சேர்ந்து உச்ச நீதிமன்றமே இந்த படுகொலை செய்துள்ளது என இந்திய தேசிய லீக் கட்சி கருதுகிறது ...

“நீட்” என்கிற கோடாரி மூலம் பிரதமர் மோடி அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கொடுத்த நரபலி !

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூர் சண்முகத்தின் மகள் அனிதா.

சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்கிறார்.

உயிரை வாங்கும் ஆவிதான் காவி என்பது தெரிந்தே அனிதாவைப் பலியிட்டனர் பாவிகள் !

அனிதாவுக்கும் அவரது எளிய குடும்பத்திற்கும் இந்திய தேசிய லீக் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம் ...

அன்புடன்
தடா ஜெ அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்..

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது