நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிரை கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!தமிழகம் முழுவதும் பல இடங்களில் பல்வேறு கல்லூரி மாணவர்களும்,சமூக அமைப்பினரும் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்ய கூறியும் மரணம் அடைந்த மாணவி அனிதா அவர்களின் மறைவுக்கு நீதி கேட்டும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி மாணவர்கள் இன்று(07/09/2017) காலை சுமார் 9:30மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டம் நடத்தபோவதை  அறிந்த கல்லூரி ஆசிரியர்கள் கல்லூரிக்கு திடீர் விடுமுறை அறிவித்தனர். இந்த போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.மாணவர்கள் அனைவரும் தலைமை தங்கினார்கள்.இறுதியாக  மாணவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.போலீசார் மாணவர்களிடையே பேச்சுவார்த்தையில் சுமார் 10மணியளவில் இப்போராட்டதை முடித்துக்கொண்டனர்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது