மேலப்பாளையத்தைச் சேர்ந்த அஜ்மல் ஹசன் இந்தியா - ஜெர்மனி நாடுகளின் கல்வி பரிமாற்ற தூதராக பொறுப்பேற்றார்.
இந்தியா ஜெர்மானிய கல்வியாளர் பரிமாற்ற சேவையின் இளம் தூதராக, மேலப்பாளையத்தைச் சார்ந்த அஜ்மல் ஹசன் பொறுப்பேற்றார்.

இவர் ஜெர்மன் நாட்டில் பிரவுஞ்ஜூவைக் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் Structural Engineering பிரிவில்ஆராய்ச்சியாளராக (Ph.D Scholar) பணியாற்றி வரும் அஜ்மல் ஹசன், ஜெர்மானிய கல்வியாளர் பரிமாற்ற சேவைக்கானஇளம் பிரதிநிதியாக (DAAD Young Ambassador) தேர்வு செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி டெல்லியில் உள்ளஜெர்மனி தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்ச்சியில் ஜெர்மன் தூதரகத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் தலைவர் ஸ்டீபன் லான்சிங்கர், இந்தியா - ஜெர்மானிய கல்வியாளர் பரிமாற்ற சேவையின் இயக்குனர் ஹைகே மாக் ஆகியோர் கலந்து கொண்டு தூதராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை அஜ்மல் ஹசனிடம் வழங்கினர். மேலும் இவர் ஆகஸ்ட் 24 முதல் 26 ம்நாள் வரை டெல்லியில் டாட் தலைமையகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமிலும் பங்கேற்றார்.

ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய கல்வி பரிமாற்ற அமைப்பான DAAD ன் இந்திய நாட்டின் பிரதிநிதியான இவர் ஜெர்மனிநாட்டின் கல்வி,ஆராய்ச்சி முறைகள், உயர்கல்வி வாய்ப்புகள், வாழ்க்கை மற்றும் உணவு முறை, பாதுகாப்புஆகியவற்றை குறித்து இந்திய மாணவர்களிடம் எடுத்துச்செல்லக் கூடிய பணியே, DAAD இந்தியா மற்றும் ஜெர்மன்நாட்டின் தூதரக அதிகாரிகளோடு இணைந்து செயலாற்றுவார்.

கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்த இவர், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில்உள்ள இந்தியாவின் உயர்ந்த தொழில் நுட்ப கல்வி நிறுவனமான IIT யில் M.Tech (Structural Engineering) ல் படித்தார். அங்குஇறுதி ஆண்டு படிக்கும்போது, ஜெர்மனியில் உள்ள பிரவுஞ்ஜூவைக் தொழில் நுட்ப பல்கலைகழகத்தில் தனது இறுதிஆண்டுக்கான ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். மேலும் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தில்நடைபெற்ற உலக ஆராச்சியாளர்கள் மாநாட்டில் இவரது ஆய்வறிக்கை தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த அப்துல் கபூரின் மகன் அஜ்மல் ஹசன் மேலப்பாளையத்திலிருந்து வெளிநாட்டில் சென்று படிக்கும் முதல் Ph.D Scholar ஆவார். இவருடைய பணி சிறக்கவும், எல்லாம் வல்ல இறைவன் அவருடைய கல்வி ஞானத்தை விசாலமாக்கிட பிரார்த்தனை செய்வோம்.விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது