முத்துப்பேட்டை அருகே ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் மூவர் உயிரிழப்பு. தமுமுக தலைவர் இரங்கல்முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம்   கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சிராஜ் இவர் தமுமுகவின் கிளை செயலாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை மனைவியுடன் முத்துப்பேட்டை நோக்கி வாகனத்தில் வந்துள்ளார் அப்போது எதிரே வந்த கார் இவரின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே சிராஜ்ஜுதீன் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவரது மனைவி மற்றும் காரில் வந்த மற்றோருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

சிராஜ் மரணமடைந்த தகவல் அறிந்த தமுமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் சிராஜ் மரண செய்தியரிந்து  தாம் மிகுந்த துயரம் அடைந்ததாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது