அதிரை அருகே உள்ள அரசு பள்ளிகளில் இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் நில வேம்பு காசாயம் வினியோகம்..!


         
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றிவுள்ள பகுதியில்  மர்மக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்ம காய்ச்சலில் பாதிக்கபட்டவர்களை தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது அதிராம்பட்டினம் பகுதியில் பொதுமக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.


பெருகி வரும் கொசுக்களினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இக்காய்ச்சல் விஷக் காய்ச்சலாக மாறி டெங்கு காய்ச்சலாக பரவி வருகிறது. இதனையடுத்து

அதிராம்பட்டினத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு அடிக்கடி மர்ம காய்ச்சல் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சல், விடாத தலைவலி காரணமாக அன்றாடம் ஏராளமானோர் சிகிச்சை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை வாங்கிச் செல்கின்றனர்.

இதனையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுபேரின் அதிராம்பட்டினம் இந்தியன் ரெட்கிராஸ் சேர்மன் மரைக்கா கே.இத்ரிஸ்அஹமது தலைமையில் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 250 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ குணங்களும், பயன்களும் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு முறை விளக்கப்பட்டு  நில வேம்பு காசாயம் வழங்கப்பட்டது.

என்.ஆறுமுகசாமி முகாமை தொடங்கி வைத்தார.; அப்துல்ஹமீது, ஹாஜியார், ஹலீம், நவாஸ், காளிதாஸ், அப்துல்ரஹ்மான், நஜீம், சுஹைபு, பாஞ்சாலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில்
முத்துக்குமரன் நன்றி கூறினார். இதனையடுத்து அனைத்து பகுதிகளிலும் நிலவேம்பு காசாயம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது