அதிரை செக்கடி பள்ளி அருகே உள்ள நடைப்பயிற்சி மையம் மர்ம நபர்களால் உடைப்பு..!

அதிரை செக்கடி பள்ளிவாசல் அருகில் பல லட்சம் ரூபாய் செலவில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மையம் துவங்கப்பட்டது.

இந்த நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மையம் ஆண்கள் மட்டும்மின்றி பெண்களுக்கும் தனி நேரம் அறிவித்து அவர்களும் பயனடையும் வகையில் நடத்தப்பட்டு வந்தது.இந்த மையத்தின் மூலம் பலர் ஆரோக்கிய வாழ்வுக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, தற்பொழுது இந்த நடைப்பயிற்சி மையத்தின் சுற்று புறம் மரங்களை கொண்டு வண்ண வகையில் செய்யப்பட்டு இரவில் மற்றும் அனுமதிச்ச நேரங்களுக்கு பிறகு யாரும் சொல்லமுடியாத அளவிற்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது அந்த சுற்றுப்புற அடைப்பு முழுமையாக மர்ம நபர்களால் நேற்று இரவு உடைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பத்தினால் அங்கு தேவையில்லாத விபரீதங்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.இதனை உடனே சரிசெய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அணி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது