உணவு பொருட்கள் தரம் குறைவு குறித்து புகார் அளிக்க புதிய வாட்சப்ப எண் அறிவிப்பு..!

                 உணவு பொருட்கள் தரம் குறைவு மற்றும் கலப்படம் குறித்து புகார் அளிக்க புதிய வாட்சப்ப எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி வெளியிட்ட செய்திகுறிப்பு:-
                  கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்களை விற்பனையை தடுக்கும் வகையில் கலப்படம் மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து பொது மக்கள் தகவல் அளிக்க வாட்சப்ப்  மூலம் 94440-42322 என்ற எண்ணில் புகார் செய்ய உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வாட்சப்ப் எண்ணிற்க்கு வரும் தகவல்கள் அந்தந்த மாவட்ட நியமன அலுவலரின் மேற்பார்வையின் கீழ், அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட்டு , மாவட்ட நியமன அலுவலரிடம் ஒப்படைக்கபட்டு , மாநில உணவு பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெருவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் உணவு பொருட்கள் கலப்படம் மற்றும் தரம் குறைவு பற்றி மேலே உள்ள வாட்சப்ப் எண்ணிற்கு தெருவிக்கும்படி தெருவித்தனர்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது