மறைந்த கோட்டூர் தமுமுக கிளை செயலாளர் குடும்பத்திற்கு மமக மாநில பொது செயலாளர் நேரில் சென்று ஆறுதல்..!


            மறைந்த திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தமுமுக கிளை செயலாளர் சிராஜ் அவர்களின் குடும்பத்திற்கு மமக மாநில பொது செயலாளர் p. அப்துல் சமது அவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெருவித்தார்.

கடந்த 03-09-2017 அன்று இரவு முத்துப்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் கோட்டூர் தமுமுக கிளை செயலாளர் சிராஜ் மற்றும் அவரின் மனைவி அனிப் பேகம் ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.
 கார் ஓட்டுனர் சீனிவாசனும் மரணமடைந்தார். மரண செய்தி அறிந்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக நிர்வாகிகள் , முத்துப்பேட்டை , கட்டிமேடு, திருத்துறைப்பூண்டி நகர நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் சமுதாய சொந்தங்கள் அனைத்து இயக்க ,அரசியல் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு அடுத்தநாள் காலை பிரதபரிசோதனை முடிந்து கோட்டுர் பள்ளிவாசலில் இருவருக்கும் இருதி தொழுகை முடிந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கத்தில் தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத்தில் பல்வேறு கிளை நிர்வாகிகள் முத்துப்பேட்டை ஜமாத் சார்ந்த நிர்வாகிகள் உறவினர்கள் பல்வேறு சமுக மக்கள் கலந்துக்கொண்டார்கள். அதனை தொடர்ந்து இன்று (05-09-2017) மமக மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது அவர்கள் சிராஜ் இல்லத்திற்கு வருகை புரிந்தார்.

 அவருடன் தமுமுக முத்துப்பேட்டை ஒன்றிய தமுமுக செயலாளர் நெய்னா முகமது உடன் சென்றார். அவர்கள் சிராஜ் குடும்பத்தினருக்கும்,குழந்தைகளுக்கும் ஆறுதல் கூறினார்கள்.


மரணம் அடைந்த சிராஜ் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தைகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். சிராஜ் அவர்கள் தாய், தந்தையை இழந்தவர். அவரின் மாமனார் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமுமுக-மமக மாநில நிர்வாகத்தின் வழிகாட்டலில் தமுமுக-மமக மாவட்ட நிர்வாகம் சிராஜ் அவர்களின் குழந்தைகளுக்கு இயன்ற உதவிகள் செய்வதாக உறுதி கூறியுள்ளது.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது