அதிரையில் டெங்கு ஆய்வுக்கு வருபவர்கள் யாரிடமும் அடையாள அட்டை இல்லை!


அதிரையை ஆட்டிபடைக்கும் டெங்குவை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிடபட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக சுகாதாரம் குறித்த ஆய்வை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு பேரூர் நிர்வாகத்தின் சார்பில் அடையாள அட்டை ஏதும் வழங்கப்படவில்லை. இதனால் சில வீடுகளில் போதிய அளவில் ஒத்துழைப்பை வழங்க மறுக்கின்றனர்.

இதனால் நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் ஒப்பந்த அடிபடையில் பணியில் அமர்த்தபட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்க ஆவன செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும்.விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது