அதிரை மேலதெருவில் வீணாகும் குடிநீர்,தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம்..! குளத்தில் நிரப்ப மக்கள் கோரிக்கை..!

           
             அதிராம்பட்டினம் மேலதெருவில் உள்ள நீர் தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறி அருகே உள்ள ஒரு பகுதியில் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு கூட்டு குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் மேலதெரு நீர் தேக்கதொட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீரை சேமித்து பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் தொட்டிலிருந்து தண்ணீர் நிரம்பி வழிந்து வீணாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அருகில் உள்ள சாலைகளில் ஆறுபோல் ஓடுகிறது.

அதுமட்டும்மின்றி அந்த குடிநீர் அப்பகுதி கழிவுநீரில் கலந்து அப்பகுதியில் டெங்கு போன்ற கொடிய நோய்களை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிரை மட்டுமின்றி பல இடங்களில் மக்கள் குடிநீர் பற்றாக்குறையால்  அவதிப்பட்டு வரும் நிலையில், கூட்டுக் குடிநீர் சோதனை ஓட்டத்  தண்ணீர் வீணாவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோதனை ஓட்டம் மேலும் சில நாட்கள் தொடர இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் விதத்தில் அப்பகுதியில் உள்ள செடியன் குளத்தில் நிரப்புவதற்கு  தன்னார்வலர்கள் முயற்சியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 இக்குளத்தில் நீரை நிரப்புவதன் மூலம் அனைத்து சமயத்தவர்கள் குளித்து மகிழவும், ஆடு, மாடு, பறவைகள் நீர் அருந்தி செல்ல முடியும் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது