அதிரை அருகே விபத்து! மது பாட்டில் வயிற்றில் வைத்து சென்ற வாலிபர் மீது மது பாட்டில் குத்தி படுகாயம்!அதிரை அருகே புதுக்கோட்டை உள்ளுறை சேர்ந்த ரங்கசாமி இவரது மகன்  செந்தில்குமார் வயது (28) கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்  அதிராம்பட்டிளத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள ஒயின்ஷாப்பில் மது  பாட்டிலை வாங்கிக்கொண்டு வயிற்றில் வைத்து சென்றுள்ளார். அருகே சாலை ஒரத்தில் சென்று கொண்டிருந்தபோது  எதிர் பாரத விதமாக  இருசக்கர வாகனம் செந்தில்குமார் மீது மோதியது.
 இதில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு   வயிற்றில் வைத்திருந்த மது பாட்டில் நொறுங்கி வயிற்றில் குத்தி காயங்களை ஏற்ப்பட்டது.

இதனையடுத்து, தமுமுக ஆம்புலன்ஸ் விரைவில் வந்து ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பாதி மது பாட்டில்தான் எடுக்க முடிந்தது மீதி பாட்டில் எடுக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறினார்.இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையெடுத்து பொதுமக்கள் கூறுகையில் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஒயின்ஷாப் இருக்கின்றது. அந்த ஒயின்ஷாப் வந்ததுலிருந்து அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த விபத்தை தவிர்க்க வேண்டுமென்றால் ஒயின்ஷாபை வேற இடத்தில் பற்றவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது