அதிரையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் ஆலோசனை கூட்டம்..!(படங்கள் இணைப்பு)

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் கிளையின் கூட்டம் 31.08.2017 அன்று அதிராம்பட்டினத்தில் தலைவர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது.

 கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இந்தியன் ரெட் கிராஸ்சொஸைட்டி மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துடன் இணைந்து  ரத்த தான முகாமை 04-09-2017 (திங்கள் கிழமை) காலை 09:30 மணி முதல் பிற்பகல் 03: 00 மணி வரை அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடத்துவது

அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவுவதை தடுக்க பொது சுகாதாரதுறை மற்றும் உள்ளாட்சி துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒட்டுமொத்த துப்புரவு பணி,நிலவேம்பு கசாயம் வழங்குதல், காய்ச்சல் சிகிச்சை முகாம் நடத்துதல் போன்ற பணிகளை செய்யவேண்டும்.

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிறப்பு காய்ச்சல் வார்டு அமைக்கவேண்டும்.நிலவேம்பு கஷாயம் வழங்கவேண்டும்.இரவு நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இருக்கவேண்டும் .


அதிராம்பட்டினத்தில் தொழுநோய்கட்டுப்பாட்டுதுறையின் சார்பில் சிறப்பு முகாம்களை நடத்தவேண்டும் போன்ற தமிழக அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானங்கள் நிறைவேட்டப்பட்டன.மேலும்
புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல்

பிரதி மாதம் ரெட்கிராஸ் சொசைட்டியின் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் கூட்டம் நடத்துதல்.

போன்ற தீர்மானங்களும் நிறைவேட்டப்பட்டன.

இறுதியில் பிரில்லியண்ட் மெட்ரிக் பள்ளி உரிமையாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது