அதிரை CMP சாலையில் அருந்து கிடந்த மின்கம்பியால் பரபரப்பு!

அதிராம்பட்டினம் சிஎம்பி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் மக்கள் தொகைக்கு ஏற்றார்போல அங்கு மின் வினியோகம் செய்யப்படுவதில்லை.

தோப்புகாடாக இருந்த காலத்தில் இருந்த மின் கம்பங்கள், கம்பிகள் அப்படியே ஒட்டுபோட்டு சரிகட்டபடுவதால் அப்பகுதியில் அவ்வப்போது மின் கம்பிகள் அறுந்து விழும் சூழல் உள்ளது.

அதன்படி இன்று மாலை7 மணியளவில் பழைய மைனா மார்க் கடை கார்னர் அருகே உயரழுத்த மின் வயர் ஒன்று அறுந்து கிடந்தன இதனை கண்ட அப்பகுதி சமூக ஆர்வலர் முஹ்சீன் மின் வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார் அதன் பேரில் விரைந்து(?)வந்த மின் வாரிய ஊழியர்கள் சரிசெய்தனர் இதனால் சுமார்1 மணி நேரம் மின் வினியோகம் தடைபட்டது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது