SDPI முப்பெரும் விழா நேரலை.

Friday, July 21, 2017

ஆலத்தூரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் அதிரை AFFA அணி அபார வெற்றி..!


                  ஆலத்தூரில் கடந்த சில நாட்களாக மாபெரும் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல ஊர்களிலிருந்து பல கால்பந்து அணிகள் கலந்து கொண்டனர்.இதன் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் , அதிரை AFFA அணியும் திருவோணம் அணியும் மோதியது. இதில் அதிரை affa அணி 2-3என்ற கோளில் வெற்றி பெற்று ரூபாய் 30,000 தட்டி சென்றது.
இதில் திருவோணம் அணி இரண்டாம் பரிசாக ரூபாய் 20000 தட்டி சென்றது.


SDPI முப்பெரும் விழா நேரலை !

சென்னையில் தற்பொழுது SDPI கட்சியின் சார்பில் நடைபெற்று வரும் முப்பெரும் விழாவின் நேரலை தற்பொழுது நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் ஒளிப்பரப்பு செய்யபடுகிறது.

ஜியோவின் அடுத்த அதிரடி..!
இந்தியர்கள் அனைவருக்கும் 4ஜி செல்போன் குறைந்த கட்டண திட்டங்களுடன் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் நடந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசியதாவது:

ஒவ்வொரு விநாடிக்கும் 7 பேர் ஜியோவில் இணைகின்றனர். தற்போது ஜியோவில் 125 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். மொபைல் இணைய சேவையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவை முந்தியுள்ளது.

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 4ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்படும். ஜியோவை பயன்படுத்தினால் உங்கள் வாழ்க்கை டிஜிட்டல் ஆகும், அழகாகும். இந்த போனை அனைத்து டிவியிலும் இணைத்து, இணைய சேவை மூலம் வீடியோ, படங்களை பார்த்து கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 3 முதல் 4 மணி நேரத்திற்கு டிவியில் வீடியோ பார்க்கலாம். ரூ.153க்கு இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ், அன்லிமிடெட் இணைய சேவை வழங்கப்படும்.

இந்த மொபைல் போன் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 டெபாசிட் செய்ய வேண்டும். இத்தொகையை 3 வருடத்திற்கு பின் திரும்ப பெற்று கொள்ளலாம். மொபைல் போனுக்கு வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் முன்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SDPI கட்சி நடத்தும் முப்பெரும் விழா

9ஆம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி
பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி

21.07.2017 வெள்ள மாலை 05 | பெரியார் திடல், சென்னை

பட்டுக்கோட்டையில் நாளை(ஜூலை22)மின்தடை..!

பட்டுக்கோட்டை  பகுதிகளில் சனிக்கிழமை  (ஜூலை 22)  மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை  துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,  இங்கிருந்து மின்சாரம் பெறும் பட்டுக்கோட்டை நகர்-1, நகர்-2, நகரியம்,  பண்ணைவயல்,  சூரப்பள்ளம்,  சூரங்காடு,  வீரக்குறிச்சி,  குறிச்சி,  பாளமுத்தி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என பட்டுக்கோட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஏ.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளை கடந்தது உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ்!அதிரை எக்ஸ்பிரஸ் என்ற இத்தளம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் பொதுவான தகவல் பரிமாற்றக் களமாக தாய் மொழியாம் தமிழில் இயங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. அல்லாஹ்வின் கிருபையால் தற்போது 10 ஆண்டுகள் நிறை செய்துள்ளது. இத்தளம் பல ஊர்களிலும் வெளிநாடுகளிலும் பரவியுள்ளது.

அதிரை செய்திகள் மற்றும் நிகழ்வுகள், விளையாட்டு, விழிப்புணர்வு, வெளிநாட்டு செய்திகள், மாணவர்களுக்கான கல்வி செய்திகள், மருத்துவம் , என பல தலைப்பில் தகவல்களை உடனுக்குடன்  பகிர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் மக்களுக்கு  நமதூரில் நடக்கும் நிகழ்வுகளையும் அன்றாடச் செய்திகளையும் தெரியப்படுத்தி தெரியபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் வெளிநாட்டு  நிகழ்வுகளை செய்தியாக நமதூர் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறது

இத்தளத்தின் மூலமாக பயிற்சிபெற்றவர் தற்போது காட்சி ஊடகளில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

மேலும் தற்போது கல்லூரி படிக்கும் மாணவர்கள் அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் தொடர்ந்து எழுதுவதின் மூலம் பயிற்சிபெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டுகளை போன்று வரக்கூடிய காலங்களிலும் வாசகர்கள் நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு ஆதரவினை தர வேண்டும் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Thursday, July 20, 2017

துபையில் பிலிப்பைன்ஸ் பெண்ணை காப்பாற்றிய அதிரை இளைஞர் அப்துல் அஜீஸ்..!
அதிராம்பட்டினம் கீழத்தெருவை
சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். துபாய் நாட்டில் பணியாற்றி வரும் இவர் வேலை முடிந்து தனது காரில் வீடு
திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரமாக பிலிப்பைன்ஸ் நாட்டு
பெண் ஒருவரை இளைஞர் ஒருவர்
பாலியல் பலாத்காரம் செய்ய
முயன்றதை அப்துல் அஜீஸ் கண்டார்.
இதையடுத்து காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய அஜீஸ் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரிடம் சண்டையிட்டு அந்த பிலிப்பைன்ஸ் பெண்ணை காப்பாற்றினார். அதைத்தொடர்ந்து
பொதுமக்களின் உதவியுடன் அந்த
இளைஞரை காவல்துறையினரிடம்
ஒப்படைத்தார். தனியாக போராடி இளம்
பெண்ணை பாதுகாத்த தஞ்சை இளைஞர் அப்துல் அஜீசுக்கு துபாய் போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்களை தெரிவித்தனர்.

அதிரையில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா..!
              அதிரையில் இன்று(20/07/2017) காலை சுமார்11மணியளவில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் 2017-2018 ஆம் ஆண்டிர்கான புதிய நிர்வாகிகள் பனியமர்த்தும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடு மாவட்ட ரம்ஜான் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் Lion ஹாஜி S.M.முகம்மது முகைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் PMJF LION முகம்மது ரஃபி புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகளை பணியமர்தி சேவைகளை வழங்கிட PJMF LION S.T.சீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் LION ஹாஜி பேரா.M.A.முகம்மது அப்துல் காதர்,LION S.D.S.செல்வம் மற்றும்  Lion prof.செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல லயன்ஸ் சங்க நிர்வாகிகளும், முக்கியஸ்தர்களும் , பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கும் , பள்ளி மாணவிக்கும் மற்றும் அதிரை மாணவருக்கு ஒருவருக்கு மருத்துவ சிலவிற்க்கும் பண உதவி செய்யப்பட்டது.

மரைக்கா கே.இத்ரிஸ்அஹமதுஅவர்களுக்கு திமுகவில் ஒன்றியசிறுபான்மை அமைப்பாளர் பதவி

அதிராம்பட்டினம் பேரூர் கழக செயளாலர் இராம.குணசேகரன் அவர்கள் ஒன்றியச் செயளாலர் . மாவட்டச் செயளாலர் .இவர்களிடம் பரிந்துரையின் பேரில் அதிரை மரைக்கா.K,இத்ரீஸ் அவர்களுக்கு ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் பதவி வழங்கிய தலைமை கழகத்திற்கும். தளபதி அவர்களுக்கும். பேராசிரியர் அவர்களுக்கும். மாவட்ட. ஒன்றிய. பேரூர் கழக செளாலர்களுக்கும்  பேரூர் தி.மு .கழக சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
.A,M,Yஅன்சர்கான்
H,அசரப் அலி

வீட்டு பணியாட்களிடம் பரஸ்பரம் தொடர்பு எண்ணை பகிர்ந்து கொள்ளாதீர்... அதிர்ச்சி தரும் தகவல் !


முத்துபேட்டையை சேர்ந்தவர் ஃபாத்திமுத்து,( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும் அதிரை தரகர் தெருவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2000ஆமாவது ஆண்டு நாகூரில் திருமணம் நடைபெற்றது,  

வாழ்க்கை சுமூகமாக நகர்ந்து வந்துள்ளன. இந்த நிலையில் கனவருக்கு தகாத நண்பர்களின் நட்புக்களால்  சில ஆண்டுகளுக்கு முன்னர் குடிபழக்கம் எற்பட்டதாகவும் இதனால் ஃபாத்திமுத்து அன்றாட சிலவுக்கு கூட சிரமப்பட்டதாகவும் ... இதனை அடுத்து  பாத்திமா சக தோழிகள் மூலம் முக்கிய தெருவில் வீட்டு வேலைப்பார்த்து வயிற்றை கழுவி வந்துள்ளார்.

இதனிடையே தினமும் போதை கனவானால் ஒரு குறிப்பிட்ட தெருவின் பெயரை கூறி அந்த தெருவில் உள்ள பெண்களின் நம்பரை வாங்கி வாடி என அடித்து துன்புறுத்தியதாகவும், இதன் தொடர்ச்சியாக அவ்வபொழுது பலத்த அடி வாங்கியும் உள்ளார் பாத்திமா. 

இதன் உச்சபட்சமாக ஆத்திரமடைந்த அந்த போதை ஆஷாமி (கணவன்) பாத்திமாவின் கையை உடைத்து தொங்கவிட்டுள்ளார்.  

இதனால் மன உளைச்சளுக்கு ஆளான அவள் கனவனே வேண்டாம் என உதறிவிட்டு வேலை பார்த்த இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இது குறித்து பாத்திமா கூறுகையில்... 

தனது கனவருக்கு நான் இரண்டாவது மனைவிங்க..., அவனின் முதல் மனைவிவிட்டு வேலை செய்பவள்தான் அவள் இது போன்ற கிழ்த்தரமான செயலை செய்துள்ளாள், அதே போன்று என்னையும் நினைத்து கூ***டி கொடுக்கும் வேலையை செய்ய சொல்கிறார்.

எனது உசுரே போனாலும் நான் இது போன்ற கீழ்தரமான வேலைகளை செய்ய துனிய்மாட்டேன்... என்றும் அவரிடம் இருந்து என்னை விடுவித்து விடுங்கள் என கண்ணீர் வடிக்கிறார்... ஃபாத்திமா...

அதிரைபுதியவன்....


சட்டபேரவையில் முதலிடம் பிடித்த முஸ்லீம் லீக்கின் சட்டமன்ற உறுப்பினர்!!

கடந்த ஒருமாத காலமாக சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில், பல்வேறு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் தொகுதி தான் சார்ந்த தொகுதிக்கு ஆதரவாக பேசி வந்தனர் இந்நிலையில் அவையில் கேள்வி நேரத்தில்  அதிக அளவிலான  துணைக் கேள்விகளை கேட்டு இந்த அவையில் முதலிடம் பெறுபவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்தான சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

Wednesday, July 19, 2017

அதிரை WSC நடத்திய 17ஆம் ஆண்டு மின்னொலி கைப்பந்து போட்டி வெற்றியாளர்கள் விபரம்..!

அதிரையில் நேற்று மற்றும் இன்று WSC சார்பில் 17ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இன்று இறுதி போட்டியாக இருப்பதால் மேலதெரு ஜும்மா பள்ளிவாசல் அருகிலிருந்து டிரம்ஸ் வசிக்கப்பட்டு ஊர்வளமாக மைதானம் வரை வந்தனர்.

இந்த போட்டியில் மேலதெரு ஜமாதர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டில் முதல் நான்கு பரிசுகள் பற்றிய தகவல்கள் கீழே

முதல் பரிசு மயிலாடுதுறை 7ஸ்டார்ஸ் அணி

இரண்டாம் பரிசு அதிரை WFC அணி

மூன்றாம் பரிசு பாண்டிச்சேரி அணி

நான்காவது பரிசு தோண்டி அணியும் பரிசுகளை வென்றது.

முத்துப்பேட்டையில் நடைபெற்ற அதிசயம்.ஒரு கண்ணில் இரு விழிகளை கொண்ட ஆட்டுக்குட்டி..!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே இரு விழிகளை ஒரே கண்ணில் கொண்ட அதிசய ஆட்டுக்குட்டியை ஆடு ஒன்று ஈன்றுள்ளது.

முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் இன்று(19/07/2017) இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இந்த அதிசய ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதுவரை நிகழாத ஒரு அதிசயம் அப்பகுதியில் நிகழ்ந்துள்ளது.

Tuesday, July 18, 2017

அதிரை WSC சார்பில் 17ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி துவங்கியது..!(படங்கள் இணைப்பு)அதிரையில் WFC நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி துவக்க விழா..!
                     அதிரையில் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி துவக்க விழா இன்று(18/07/2017) நடைபெற்றது. இவ்விழாவில் துவக்கமாக கிராத் ஃபைசுதீன் ஓதினார். P.M.K.தாஜுதீன்(தாஜுல் இஸ்லாம் சங்க துணை தலைவர்) அவர்கள் மற்றும் ஜபுருல்லாஹ்(தாஜுல் இஸ்லாம் சங்க செயலாளர்) ஆகியோர் தலைமை தங்கினார்கள். இங்கு ஆட்டத்தை       P.M.K.தாஜுதீன் மற்றும் V.T. அஜ்மல் ஆகியோர் இந்த ஆட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இப்போட்டியில் N.M.S.மன்சூர்,K.S.M.பகுரூதீன்,     ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதி சுற்றுக்கு முன்னேறிய அதிரை AFFA அணி..!

ஆலத்தூர் கால்பந்து கழகம் சார்பாக
கடந்த சில வாரங்களாக கால்பந்து
தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிரை AFFA அணி
கலந்துகொண்டு சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்தி
வருகிறது.
இன்று (18/07/2017) நடைப்பெற்ற
கால்பந்தாட்ட தொடரில் அதிரை
AFFA அணியினரும், மண்ணார்குடி
7ன்ஸ் மண்ணார்குடி
அணியினரும் அரையிறுதி ஆட்டம்
விளையாடினர்.
மண்ணார்குடி அணியினர் அதிரை
Affa அணியினருக்கு எதிராக
AFFA -3
மண்ணார்குடி – 1
என்ற கோல் கணக்கில் வெற்றி
பெற்று இருதி சுற்றுக்கு
அதிரை AFFA அணியினர்
முன்னேறி உள்ளனர்.