Thursday, May 25, 2017

நம்ம வீட்ல இருக்க பர்னிச்சர்ஸ்'க்கும்,ஹோம் அப்ளையன்ஸஸ்'க்கும் திடீர்னு பேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்?

1. சேர் :
வெயிட்ட குறை, குறைவா தின்னுன்னு சொன்னா கேக்குரியா.. மாடு மாதிரி கனக்குற பாரு..
2. ஃபேன் :
நீ இப்போ என்ன வேல பாத்து கிளிச்சுட்டனுஎன்ன இப்டி சுத்தவிடுற!
3. டிவி :
ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டு பாடா படுத்துறீங்க!
4. தலையணை :
நாளக்காவது குளிடா...!! நாத்தம் கொடல புடுங்குது...!!!
5. ஃப்ரிட்ஜ் :
சாம்பார், புளிக்கொழம்பு, மீந்து போன காய்கறி...இதத்தவிர வேற எதையுமே வக்க மாட்டீங்களா டா...??
6. ட்யூப் லைட் :
நீயே ஒரு ஃப்யூஸ் போன ட்யூப் லைட், இதுல நீ என்ன போடுறியா..??
7. கண்ணாடி :
இவ்ளோ கிட்டக்க வந்து மூஞ்சியை காட்டாத... பயமா இருக்குல்ல..
8. கிரைண்டர் :
ம்ம்ம்... அப்படிதான், கண்ட எடத்தில சொரிஞ்சுட்டு வந்து கைய உள்ள விடு...!!!
9. மெத்தை:
டொம்மு..டொம்முன்னு மேல வந்து விழாதடா..
10. மிக்ஸி :
மூடிய மூடாமத்தான் ஒரு நாள் கைய உள்ள விட்டு பாரேன்...!!!
11. வால்க்ளாக் :
இப்ப என்ன பாத்துட்டு, என்னத்த கிழிக்க போற...???
12. வாசிங்மெஷின் :
பாக்கெட்ல காசு பணம் இருக்கான்னு செக் பண்ண மாட்ட!
13. மிதியடி :
என்னத்தடா மிதிச்சுட்டு வந்த..?,
மரியாதையா என்ன தாண்டி அப்டியே ஓடிப்போய்டு...!!!
14. சேவிங் ட்ரிம்மர் :
இப்ப மூஞ்சில என்ன வளந்து தள்ளிடுச்சுனு போட்டு சொரண்டி எடுக்குற...??
15. மொபைல் சார்ஜர்:
வாய தொற...!! அப்டியே அதுல கொஞ்சம் சார்ஜ் ஏத்தி விடுறேன்...!!!
16. பாத்ரூம் விளக்கமாறு :
தயவு செஞ்சு எனக்கு VRS குடுத்துடுங்களேன்...! ப்ளீஸ்...!!
17. அயன்பாக்ஸ் : அப்டியே கொஞ்சம் உன் மூஞ்சிய காட்றது...!!!
18. சர்ட் ஹேங்கர் :
வெண்ண மகனே...!, உன் சட்ட காலர கொஞ்ச பாரு...!!
உன்னோட ஒரிஜினல் கலர் அதுல ஒட்டிக்கிச்சு...!!!
நம்ம வீட்டு பொருள் இன்னும் கேவலமா நெறைய சொல்லிச்சு...!!
நான்தா கொஞ்ச மேட்டர சென்சார் பண்ணிட்டு சொன்னேன்...

Wednesday, May 24, 2017

இறுதிப்போட்டிகளைசந்திக்க இருக்கும் அதிரைAFFA அணி !


அதிரையில் 14-வது ஆண்டாக AFFA
நடத்தும் கால்பந்தாட்ட தொடர்
போட்டி கடந்த 5ஆம் தேதி முதல்
தொடங்கி கிராணி மைதானத்தில்
நடைபெற்று வருகிறது. மிகுந்த
எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த
தொடர் தற்பொழுது பரபரப்பான
இறுதிக்கட்டத்தை
நாளை நடைபெறும்
இறுதிப்போட்டையில் அதிரை
AFFA அணியை பள்ளத்தூர்
எதிர்கொள்ள இருப்பது
குறிப்பிடத்தக்கது.

Tuesday, May 23, 2017

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் பெண்களுக்காக தராவிஹ் தொழுகை ஏற்பாடு?நமதூர் புதுமனைத் தெருவில் அமைந்திருக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் எதிர் வரும் ரமலான் காலம் முழுவதும் பெண்களுக்காக தராவிஹ் தொழுகையினை நடத்த சம்சுல் இஸ்லாம் சங்கம் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரமலான் காலங்களில் நம் ஊரில் பெண்களுக்கு தெருவாரியாக ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட வீடுகளில் தராவிஹ்
தொழுகைகள் நடத்தப்பட்டாலும் அனைவரையும் ஒன்று திரட்டி தராவிஹ் தொழுகையின தொழ முயற்ச்சிகளை சம்சுல் இஸ்லாம் சங்கம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் 3 அல்லது 4 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திலிருந்து இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமா என்ற எதிர்பார்ப்பும் அதிரை மக்களிடையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

பலரும் பயன் அடையும் தக்வா பள்ளி சஹர் உணவு!

அதிரை தக்வா பள்ளி சஹர் உணவு ஏற்பாடு பல ஆண்டுகளாக சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.அதன் படி இந்த வருடமும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பயன் பெற்று வருகின்றனர்.குறிப்பாக  வெளி ஊரில் இருந்து கல்வி பயல வரும் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் ,முதியவர்கள் ஏழைகள் என பலரும் பயன் அடைகின்றனர்.சஹர் உணவு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் சிறப்பாக செய்கின்றனர்..மேலும் சஹர் ஏற்பாடிற்கான நன்கொடை அளிப்பவர்கள் தக்வா பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Sunday, May 21, 2017

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால்அசோசியேஷன் ( AFFA )இறுதிப்போட்டிக்குமுன்னேறியது!

அதிரையில் 14-வது ஆண்டாக AFFA
நடத்தும் கால்பந்தாட்ட தொடர்
போட்டி கடந்த 5ஆம் தேதி முதல்
தொடங்கி கிராணி மைதானத்தில்
நடைபெற்று
இந்த
தொடர் தற்பொழுது பரபரப்பான
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இன்று நடைபெற்ற அரையிறுதி
போட்டியில் அதிரை AFFA
அணியும் சிவகங்கை அணியும்
மோதின. மிகவும் பரபரப்பாக
நடைபெற்ற இப்போட்டியில் அதிரை
வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை
வெளிப்படுத்தினர்.
AFFA அணி 1-0
என்ற புள்ளிகள் கணக்கில் அபார
வெற்றி பெற்று இறுதி
சுற்றுக்கு முன்னேறியது.